கிருஷ்ணகிரி அருகே தொழில் அதிபரை காரில் கடத்த முயன்றதாக புகார்: போலீஸார் வழக்குப் பதிவு
கிருஷ்ணகிரி ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(50). ரியல் எஸ்டேட், வணிக வளாகம், தங்கும் விடுதி ஆகிய தொழில் செய்து வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம், காரகுப்பம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக
கிருஷ்ணகிரி அருகே தொழில் அதிபரை காரில் கடந்த முயன்ற புகார் எழுந்ததையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(50). ரியல் எஸ்டேட், வணிக வளாகம், தங்கும் விடுதி ஆகிய தொழில் செய்து வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம், காரகுப்பம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரியைச் சேர்ந்த துப்பாக்கி ராமன் என்பவரின் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சுப்பிரமணி இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். வீட்டின் அருகே அவர் சென்றுகொண்டிருந்தபோது, காரில் வந்த மர்ம குப்பல், சுப்பிரமணியைத் தாக்கி கடத்த முயன்றதாம். இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி கூச்சல் போடவே, அக்கம்பக்கத்தில் குடியிருப்போர் சம்பவ இடத்துக்கு கூடத் தொடங்கியதை அடுத்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டதாம். மர்ம கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த சுப்பிரமணி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடத்தல் சம்பவம் குறித்து சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில், தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.