முகப்பு
தற்போதைய செய்திகள்

சிகிச்சைக்கு வந்த பெண் பலாத்காரம்: ஆயுர்வேத மருத்துவர் கைது

அம்பத்தூர் கிருஷ்ணபுரம் சாரங்கபாணித் தெருவில் ஆயுர்வேத மருத்துவமனை நடத்தி வருபவர் சதீஷ்குமார்(24) இவரிடம் இதே பகுதியில் உள்ள அபிராமி(38) என்ற பெண் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:43 AM
பகிர்:

சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆயுர்வேத மருத்துவரை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கைது செய்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

அம்பத்தூர் கிருஷ்ணபுரம் சாரங்கபாணித் தெருவில் ஆயுர்வேத மருத்துவமனை நடத்தி வருபவர் சதீஷ்குமார்(24) இவரிடம் இதே பகுதியில் உள்ள அபிராமி(38) என்ற பெண் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் திங்கட்கிழமை காலை வழக்கம்போல் அபிராமி சிகிச்சைக்கு சென்றபோது மருத்துவர் சதீஷகுமார், அபிராமிக்கு மயக்க ஊசிபோட்டதாகவும்,மயங்கியநிலையில் இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்ததாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் மருத்துவரை விசாரணை நடத்தி கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.