முகப்பு
தற்போதைய செய்திகள்

யானை மிதித்து பெண் சாவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் கடந்த சில நாள்களாக 30 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இதில் 8 யானைகள் தனியாக பிரிந்து கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள

Updated On : 5 ஜனவரி, 2024 at 3:56 AM
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே வியாழக்கிழமை யானை மிதித்து பெண் ஒருவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் கடந்த சில நாள்களாக 30 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இதில் 8 யானைகள் தனியாக பிரிந்து கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள மேலுமலை வனப்பகுதிக்கு வியாழக்கிழமை அதிகாலையில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ஜூனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி (47) ஆகிய இருவரும் தங்களது வயலுக்கு அதிகாலை 5 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வனப்பகுதியையொட்டி ஒரு புளியமரத்தின் கீழே யானைகள் கூட்டமாக இருந்துள்ளது. இதை கண்ட இருவரும் அங்கிருந்து ஓடியுள்ளனர். அப்போது, யானைகள் இருவரையும் துரத்தியுள்ளது. இதில், சரஸ்வதியை யானை தூக்கி வீசி காலால் மதித்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர், யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றுள்ளது. இதையடுத்து, ராஜேந்திரன் தனது மனைவி சரஸ்வதியை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே சரஸ்வதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

காட்டு யானைகள் தாக்கியதில் கடந்த ஆண்டு சூளகிரி பகுதியில் இருவரும், கிருஷ்ணகிரி பகுதியில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். யானைகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க வனத்துறையினர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →