முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவியுடன் சரியாக குடும்பம் நடத்தாமல், வேறு பெண்ணை திருமணம் செய்தவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூர், போக்குவரத்து நகரைச் சேர்ந்தவர் ரெட்டலிங்கம் மகள் சுந்தரம்மாள் (27). இவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர், மாலைபட்டி மாரியப்பன் மகன் பாண்டிதுரை என்பவருக்கும் 2008-ம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:45 AM
பகிர்:

மனைவியுடன் சரியாக குடும்பம் நடத்தாமல், வேறு பெண்ணை திருமணம் செய்தவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூர், போக்குவரத்து நகரைச் சேர்ந்தவர் ரெட்டலிங்கம் மகள் சுந்தரம்மாள் (27). இவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர், மாலைபட்டி மாரியப்பன் மகன் பாண்டிதுரை என்பவருக்கும் 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது, ஒன்பதரை பவுன் நகைகள் மற்றும்  பணம் ரூ.16 ஆயிரம் வரதட்சிணையாக கொடுத்தார்களாம். பாண்டிதுரை மனைவியுடன் சரியாக குடும்பம் நடத்தாமல், பெற்றோர் பேச்சைக் கேட்டுக்கொண்டு ராஜேந்திரன் என்பவர் மகள் தமிழரசியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாராம்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுந்தரம்மாள் புகார் செய்தார். போலீஸார் பாண்டிதுரை, அவரது தந்தை மாரியப்பன், தாய் சின்னமுனியம்மாள், சகோதரிகள் முனீஸ்வரி, பெரிய முனியம்மாள் மற்றும் இரண்டாவது மனைவி தமிழரசி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →