முகப்பு
தற்போதைய செய்திகள்

விடுதி உணவு சரியில்லை என்று கல்லூரி மாணவர்கள் தர்ணா

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.  இக்கோயிலில் ஆயிரக்கணக்கான மாணவ,

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:47 AM
பகிர்:

பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் விடுதி உணவு சரியில்லை என விடுதி மாணவர்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.  இக்கோயிலில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பல்வேறு துறைகளில் கல்வி பயின்று வருகின்றனர்.  இதில் சுமார் நானூறு மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.  விடுதியில் பயிலும் மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் விடுதிக்கட்டணம், உணவுக்கட்டணம் என சுமார் ரூபாய் ஆயிரத்து எண்ணூறு வசூலிக்கிறதாம்.  இந்நிலையில் விடுதியில் வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை என தெரிவித்து செவ்வாய்க்கிழமை காலை நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்லூரி அலுவலகம் முன்பு திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் தெரிவித்ததாவது, விடுதியில் உணவுகள் தரமற்ற உணவுப் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது, பலமுறை பூச்சிகள் இருந்ததை காட்டியுள்ளோம். உணவு பற்றாக்குறையாக குறைந்த அளவிலேயே வழங்கப்படுகிறது இதுகுறித்து பலமுறை கல்லூரி நிர்வாகத்துக்கு புகார் செய்தும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.  

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த முதல்வர்(பொறுப்பு) கந்தசாமி மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து முதல்வர்(பொறுப்பு) கந்தசாமி தெரிவித்ததாவது, மாணவர்களுக்கு தரமான உணவுப் பொருட்களைக் கொண்டே உணவு தயாரிக்கப்படுகிறது. அதிலும் மெனுவை மாணவர்களே தயாரித்து வழங்குகின்றனர்.  இன்றைய மெனுவான பொங்கலுக்கு புதிய அரிசி பயன்படுத்தியதால் அதிகமாக வெந்துவிட்டது. இதை மாணவர்கள் தவறாக புரிந்து கொண்டனர். விரைவில் மாணவர்களுக்கு வேண்டிய வசதிகளை விடுதியில் செய்து தருவதாக தெரிவித்துள்ளோம் என தெரிவித்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.