முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் வெடிகுண்டு சம்பவம், இரட்டை கொலை வழக்கு: திண்டுக்கல் ரவுடி மோகன்ராம், சத்யா நீதிமன்றத்தில் ஆஜர்

சிதம்பரம் வெடிகுண்டு சம்பவம் மற்றும் இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் இருக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம், சத்யா ஆகியோர் சிதம்பரம் நீதிமன்றத்தில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:47 AM
பகிர்:

சிதம்பரம் வெடிகுண்டு சம்பவம் மற்றும் இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் இருக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம், சத்யா ஆகியோர் சிதம்பரம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டனர்.

கடந்த மே.3-ம் தேதி மாரியப்பாநகரில் பல்கலைக்கழக ஊழியர் அருள்பிரசாத் வீட்டில் வெடிகுண்டு வெடித்ததில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் என்பவர் படுகாயமுற்றார். மேலும் அந்த வீட்டிலிருந்து டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, யுஎஸ்ஏ முத்திரை பதித்த 6 எம்எம் துப்பாக்கி, சீனா செல்போன், அரிவாள்கள் மற்றும் டைரி, சிம்கார்டுகள், பான்கார்டுகள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டன. இதனை அடுத்து தொடர் சம்பவமான சிதம்பரம் அண்ணாமலைநகரில் கலுங்குமேட்டில் வசிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களான ஆம்புலன்ஸ் குமார் (34), அவரது தம்பி ராஜேஷ் (32) ஆகிய இருவரையும் கடந்த செப்.2-ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு வந்த மர்மகும்பல் ஒன்று  வெடிகுண்டு வீசி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து, இருவரது தலையை மட்டும் எடுத்துக்கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயில் முன்பு வைத்துவிட்டு தலைமறைவாகினர்.

இந்த இரு வழக்கிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளி திண்டுக்கல்லைச் சேர்ந்த மோகன்ராம் (34), சீர்காழியைச் சேர்ந்த சத்யா என்கிற சத்யராஜ் (32) ஆகிய இருவரும் கடலூர் மத்திய சிறைச்சாலையில் உள்ளனர். இவ்வழக்கில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மோகன்ராம், சிறைக்குள் இருந்தபடியே சிதம்பரம் இரட்டை கொலை வழக்கில் சதி திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது. சத்யா வெடிகுண்டு வெடித்த வழக்கில், இரட்டை கொலை வழக்கிலும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில் மேற்கண்ட இருவரும் கடலூர் மத்திய சிறைச்சாலையிலிருந்து புதன்கிழமை சிதம்பரம் நம்பர்-1 மாஜிஸ்டிரேட் கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அவர்கள் இருவரையும் அக்.1-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.