பெற்றோர் கொடுத்த ஒரு வேளை சாப்பாட்டுப் பணத்தை காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பிய ஏழை மாணவர்கள்
ஜம்மு-காஷ்மீரில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுக்கு, பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஏழை தலித் குழந்தைகள் தங்களுக்கு பெற்றோர் வாங்கி சாப்பிட கொடுக்கும் ஒரு நாள் பணத்தை வழங்கியுள்ளார்கள்.
தற்போதைய செய்திகள்பெற்றோர் கொடுத்த ஒரு வேளை சாப்பாட்டுப் பணத்தை காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பிய ஏழை மாணவர்கள்
ஜம்மு-காஷ்மீரில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுக்கு, பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஏழை தலித் குழந்தைகள் தங்களுக்கு பெற்றோர் வாங்கி சாப்பிட கொடுக்கும் ஒரு நாள் பணத்தை வழங்கியுள்ளார்கள்.
ஜம்மு-காஷ்மீரில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுக்கு, பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஏழை தலித் குழந்தைகள் தங்களுக்கு பெற்றோர் வாங்கி சாப்பிட கொடுக்கும் ஒரு நாள் பணத்தை வழங்கியுள்ளார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில், நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியுள்ளது. இங்கு முழுவதும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள்.
ஜம்மு-காஷ்மீர் வெள்ள சேதம் குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்தி குறித்து, மாணவர்களுக்கு பத்திரிக்கைகள் மற்றும் கணினி வாயிலாக வெள்ள சேதங்களின் படங்களை ஆசிரியர்கள் 1-ம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு விளக்கியுள்ளார்.
மேலும், ஜம்மு-காஷ்மீரில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுக்கு, நாடு முழுவதிலிருந்தும் உதவிகள் தேவைப்படுகிறது என்றும், அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நாட்டு மக்கள் அனைவரும் உதவி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதை விளக்கியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துயரைப் போக்குவதற்கு பிரதமரின் நிவாரண நிதிக்கு, நிதியுதவி செய்ய பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளையும் ஆசிரியர்கள் விளக்கியுள்ளார்.
இந்த தேசியப் பணியில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், நாட்டிலிருந்து பல நன்மைகளைப் பெறும் நாம், நாட்டு மக்களுக்கு உதவுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் ஆசிரியர்கள் விளக்கியுள்ளார். மாணவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை கொடுக்கலாம் என்று கூறியுள்ளார். 1-ம் வகுப்பு மாணவி வைஷ்ணவி, சாப்பாடு கொடுப்பதாயும், மற்றொரு 1-ம் வகுப்பு மாணவி தண்ணீர் கொடுப்பதாயும் கூறினார். ஆசிரியர் மேலும் இதுபோன்றவற்றை அனுப்ப இயலாது என்று விளக்கிக் கூறியதையடுத்து, தங்களுக்கு மதிய உணவிற்கு தொட்டு சாப்பிடுவதற்கு ஊறுகாய் வாங்குவதற்கு தரும் பணத்தையும், மிட்டாய் வாங்கி சாப்பிடத் தரும் பணத்தையும் கொடுப்பதாய் மாணவர்கள் தெரிவித்தனர்.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் பலர் தங்களது ஒருநாள் பணமான தங்களால் இயன்ற 50 பைசா, 1 ரூபாய் என ரூ.405-யை ஆசிரியரிடம் கொடுத்தனர். ஆசிரியர்கள் பிரதமரின் நிவாரண நிதிக்கு பாரத ஸ்டேட் வங்கியின் இணையதள சேவை வாயிலாக வியாழக்கிழமை இந்தப் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், மாணவர்களுக்கு சிறு வயதிலேயே தேசப் பற்றையும், உதவி செய்யும் மனப்பான்மையும் வளர்ப்பதற்காகவே இதுபோன்ற முயற்சி. தங்கள் கொடுத்த காசு குறைவாக இருந்தாலும், அவர்கள் தங்களிடம் ஒருநாளுக்கு என்று இருந்த முழு பணத்தையும் மனப்பூர்வமாக கொடுத்துவிட்டார்கள். தேசத்தின் தேவையை சந்திப்பதில் தனது பங்கும் இருப்பதாய் இந்த ஏழை மாணவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். கார்கில் யுத்தம், குஜராஜ் பூகம்ப பாதிப்பு முதலியவற்றிற்கும் இம் மாணவர்கள் தங்களால் இயன்ற உதவியை அளித்தனர். இத்தோடு இது நிற்ககூடாது என்றும், நீங்கள் பெரியவர்களாகி கல்லூரியில் படித்தாலும், வேலையில் இருந்தாலும் இது போன்று தேசத்தின் தேவையை சந்திக்க முன் வர வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று ஆசிரியர்கள் கூறினர்.