கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ 180 கோடி: மேலாண்மை இயக்குநர் தி.ந.வெங்கடேஷ் ஐஏஎஸ்
தமிழகத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் இந்த ஆண்டு (2014) தீபாவளி விற்பனை ரூ.180 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.112 கோடி விற்பனை செய்யப்பட்டது என கோ-ஆப்டெக்ஸ்
தமிழகத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் இந்த ஆண்டு (2014) தீபாவளி விற்பனை ரூ.180 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.112 கோடி விற்பனை செய்யப்பட்டது என கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தி.ந.வெங்கடேஷ் ஐஏஎஸ் தெரிவித்தார்.
சிதம்பரம் மேலவீதி தீன்பில்டிங்கில் சிவகாமி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் தீபாவளி விற்பனையை கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தி.ந.வெங்கடேஷ், கடலூர் மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.
பின்னர் அவர் மேலாண்மை இயக்குநர் தி.ந.வெங்கடேஷ் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: கோ-ஆப்டெக்டஸ் நிறுவனம் 79 ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு பாரம்பரிய உடைகளை கூட்டுறவு சங்கங்கள் மூலம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் கோ-ஆப்டெக்டஸ் நிறுவனத்தின் 200 விற்பனை நிலையங்கள் உள்ளன. மொத்தம் 11 மண்டலங்களில், 3 மண்டலங்கள் மும்பை, பெங்களூர், விஜயவாடா ஆகிய பகுதிகளில் 70 விற்பனை நிலையங்கள் இயங்குகின்றன. இந்த ஆண்டு மேற்கண்ட மூன்று மண்டலங்களில் 30 சதவீதம் விற்பனையை அதிகரிக்க நிர்ணயம் செய்துள்ளோம். கடலூர், புதுச்சேரி, நாகை மாவட்டங்களில் 17 விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த கடைகளுக்கு தீபாவளி விற்பனை ரூ.15 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு தீபாவளி விற்பனை ரூ.150 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மகாபாணி சேலைகள்: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சென்னை தலைமை அலுவலகத்தில் நேஷனல் பேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் பயின்ற 5 சிறந்த டிசைனர்களை கொண்டு டிசைன் ஸ்டுடியோ அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்த ஆண்டு ஆயிரம் புதிய வடிவமைப்புகளை செய்துள்ளனர். இந்த தீபாவளி சிறப்பாக மகாராணி சேலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மைசூர், ராமநாதபுரம், சின்னமனூர் உள்ளிட்ட அரண்மணைகளில் ராணிகள் உடுத்திய சேலைகள் 20 புதிய டிசைன்களில் சேலம், கோவை பகுதி கூட்டுறவு சங்கங்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏழை மக்கள் பயன்படுத்தும் வகையில் குறைந்த ஜரிகைகளுடன், குறைந்த விலையில் ரூ.1500 முதல் 2000 ஆயிரம் வரையிலான பட்டுசேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பேஸ்புக்கில் கோ-ஆப்டெக்ஸ்: கோஃஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ஆண்களுக்கான சில்க் ஷர்ட், குர்தா, பைஜாமா உள்ளிட்டவை புதிய வடிவமைப்பில் தீபாவளிக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளன. கல்லூர் மாணவியர்களுக்கான டாப்ஸ் 10 டிசைன்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் குறித்து பேஸ்புக்கில் புதிய பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆன்லைன் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் விற்பனை தொடங்கப்படவுள்ளது. என மேலாண்மை இயக்குநர் தி.ந.வெங்கடேஷ் தெரிவித்தார். விழாவில் சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த், வட்டாட்சியர் ஜி.அன்புசெல்வி, மக்கள்-தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன், கடலூர் மண்ட நிர்வாகக்குழு உறுப்பினர் த.ராமலிங்கம், மண்டல மேலாளர் மா.பார்த்தசாரதி, சிதம்பரம் கிளை மேலாளர் சி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.