முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி ரோப்கார் பராமரிப்புப் பணிகள் நிறைவு.  சோதனை ஓட்டம் துவக்கம்

தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மலை உச்சியை  இரண்டு நிமிட நேரத்தில் பக்தர்கள் சென்றடையும் வகையில் கடந்த 2004ம் ஆண்டு நிறுவப்பட்ட

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:53 AM
பகிர்:

பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாதிரி எடைகள் வைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மலை உச்சியை  இரண்டு நிமிட நேரத்தில் பக்தர்கள் சென்றடையும் வகையில் கடந்த 2004ம் ஆண்டு நிறுவப்பட்ட ரோப்கார் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  பக்தர்கள் பாதுகாப்பு கருதி ரோப்கார் தினமும் ஒரு மணி நேரமும், மாதம் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பராமரிப்புப் பணியின் போது ரோப்காரின் பெட்டிகள், பேரிங்குகள், சாப்ட்டுகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய உதிரி பாகங்களும் கழற்றி சீர் செய்யப்பட்டு வருகிறது.  பழுதடைந்த உதிரிபாகங்கள் உடனடியாக மாற்றப்பட்டது.

தற்போது மலைக்கோயிலில் உள்ள தளத்தின் சாப்ட், கீழ் தளத்தில் உள்ள சாப்ட், சக்கரங்கள் அனைத்தும் சுமார் ஆயிரத்து இருநூறு கிலோ எடையில் சுமார் ஆறு இலட்சம் மதிப்பில் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. மலைக்கோயில் மேலே உள்ள தளத்தில் சிறிய சக்கரங்கள் முதல் பெரிய சக்கரங்கள் வரை அனைத்தின் ரப்பர் புஷ்களும் மாற்றப்பட்டு வடக்கயிற்றில் இணைக்கப்பட்டுள்ளது.  மலைப்பாதையில் உள்ள சுமார் 75 அடி உயர டவரில் உள்ள சக்கரங்களும் கழற்றி புதிய புஷ்கள் மாற்றப்பட்டது.  ரோப்கார் பெட்டிகள் சீரமைக்கப்பட்டு, புதியவர்ணம் பூசப்படு பணிகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சோதனை எடைகள் ஏற்றப்பட்டு ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. 

சோதனை ஓட்டத்தின் பணிகள் திருப்திகரமாக இருக்கும் நிலையில் ரோப்கார் உயர்மட்டக்குழுவினர் வந்து ஆய்வு மேற்கொண்ட பின்னர் ஓரிரு நாட்களில் ரோப்கார் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும் என திருக்கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.