பழனி ரோப்கார் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்தது
பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வர ஏதுவாக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரோப்காரை மாதம் ஒருமுறை ஒரு நாளும், வருடத்துக்கு ஒருமுறை ஒருமாதமும்
பழனி மலைக்கோயில் ரோப்கார் திங்கள்கிழமை முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வர ஏதுவாக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரோப்காரை மாதம் ஒருமுறை ஒரு நாளும், வருடத்துக்கு ஒருமுறை ஒருமாதமும் நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பாக ரோப்கார் நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ரோப்கார் தளங்களில் சுமார் ஆறு லட்சம் மதிப்பில் புதிய சாப்டுகள், வீல்கள் கல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்டு மாற்றப்பட்டது. மேலும், ரப்பர் புஷ்கள், பேரிங்குகள் மாற்றப்பட்டது. ரோப்கார் பெட்டிகளுக்கு புதிய வர்ணம் பூசப்பட்டு கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சோதனை எடை ஏற்றப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை சோதனை ஓட்டம் குறித்த ஆய்வை அதிகாரிகள் மேற்கொண்டு இயக்கம் திருப்திகரமாக இருந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை பக்தர்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்பட்டது. இன்று ரோப்கார் பெட்டிகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் திருக்கோயில் அதிகாரிகள், அலுவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.