திருக்கோவிலூர் அருகே சாலையோர புளியமரத்தில் லாரி மோதி 3 பேர் சாவு: 30 பேர் படுகாயம்
திருவண்ணாமலை மாவட்டம் நாரையூர் கிராமத்திலிருந்து மயிலம் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக 50 பேர் லாரியில் சென்றனர். அப்போது திருக்கோவிலூர் கீழ்வாழை கிராமம் அருகே வந்த லாரி
திருவண்ணாமலை மாவட்டம் நாரையூர் கிராமத்திலிருந்து மயிலம் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக 50 பேர் லாரியில் சென்றனர். அப்போது திருக்கோவிலூர் கீழ்வாழை கிராமம் அருகே வந்த லாரி சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து கண்டாச்சிபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.