முகப்பு
தற்போதைய செய்திகள்

சுற்றுலா அமைச்சர் ராஜவேலு தில்லி பயணம்

சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக புதுவை சுற்றுலா அமைச்சர் பெ.ராஜவேலு புதன்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:07 AM
பகிர்:

சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக புதுவை சுற்றுலா அமைச்சர் பெ.ராஜவேலு புதன்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றார்.

புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், புதிய சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தவும், சுற்றுலா மேம்பாட்டிற்குத் தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெறும் வகையில் அவர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் மகேஷ் சர்மாவை சந்திக்கும் அமைச்சர், புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் மேலும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் போதிய நிதியை (CFA - Central Financial Assistance)-லிருந்து  விரைந்து வழங்குமாறு வலியுறுத்துகிறார்.

பின்னர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு 10-ஆம் தேதி புதுச்சேரி திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.