சிதம்பரம் கோட்டாட்சியராக பி.எஸ்.விஜயலட்சுமி பதவிஏற்பு
சிதம்பரம் உதவிஆட்சியராக பணியாற்றிய எம்.அரவிந்த் தமிழகஅரசு நிதித்துறை சார்பு துணைச் செயலராக பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து நெய்வேலி நிலஎடுப்பு தன
சிதம்பரம் புதிய கோட்டாட்சியராக பி.எஸ்.விஜயலட்சுமி புதன்கிழமை பதவிஏற்றார்.
சிதம்பரம் உதவிஆட்சியராக பணியாற்றிய எம்.அரவிந்த் தமிழகஅரசு நிதித்துறை சார்பு துணைச் செயலராக பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து நெய்வேலி நிலஎடுப்பு தனி துணை ஆட்சியர் தினேஷ் சிதம்பரம் கோட்டாட்சியர் பொறுப்பு வகித்தார். இந்நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.விஜயலட்சுமி புதன்கிழமை பதவிஏற்றார். கோட்டாட்சியராக நேரடியாக தேர்வு செய்யப்பட்ட இவர் இதற்கு முன்பு நாகப்பட்டினத்தில் பயிற்சி முடித்து திருவாரூர் மாவட்ட கலால் உதவிஆணையராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கோட்டாட்சியராக பொறுப்பேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: மே.1-ம் தேதி நடைபெறவுள்ள நடராஜர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை தீவிரபடுத்துவேன். இவையல்லாமல் வாக்காளர் அட்டையுடன், ஆதார் அட்டை விபரங்களை இணைக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.