உடன்குடி அனல் மின் நிலையத்திட்டப்பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தி திருச்செந்தூரில் இருந்து உடன்குடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்இரு வாகனப்பிரச்சார பயணம் மேற்கொண்டனர்.
திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விவசாயம், தொழில், வேலைவாய்ப்பு மற்றும் மின்சாரத்தேவையை பூர்த்தி செய்திட கிடப்பில் போடப்பட்டுள்ள உடன்குடி அனல் மின் நிலையத்திட்டப்பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இரு சக்கர வாகனப்பிரச்சாரப்பயணம் ஞாயிற்றக்கிழமையன்று காலை நடைபெற்றது.
திருச்செந்தூர், உடன்குடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலர்கள் திருச்செந்தூர் ஆ.சந்திரசேகர், உடன்குடி வே.ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர். பிரச்சாரப்பயணத்தினை கட்சியின் மதுரை (கிழக்கு) சட்டப்பேரவை உறுப்பினர் இரா.அண்ணாதுரை தொடங்கி வைத்தார். வாகனப்பிரச்சாரமானது நா.முத்தையாபுரம், நாலுமூலைக்கிணறு, காயாமொழி, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், குலசை வழியாக சென்று மாலையில் உடன்குடியில் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றியச்செயலர்கள் ஆழ்வார்திருநகரி தங்கராஜ், சாத்தான்குளம் பாலகிருஷ்ணன்,
ஸ்ரீவைகுண்டம் முருகன், கருங்குளம் அப்பாக்குட்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.மாரியப்பன், வி.பாலசுப்பிரமணியன், ரசூல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.கந்தசாமி, எஸ்.பன்னீர்;செல்வம், சி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கோ.பத்மநாப பிள்ளை தலைமையிலான காவல்துறையினர் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.