முகப்பு
தற்போதைய செய்திகள்

குடும்பத் தகராறு: குழந்தையுடன் தாய் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அடுத்த தம்புரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி தேவி(25) குடும்ப தகராறின் காரணமாக அவரது மகன் மஞ்சித் குமார்(5), மகள் ஜீவிதா(3)

Updated On : 21 ஏப்ரல், 2015 at 8:56 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த தம்புரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி தேவி(25) குடும்ப தகராறின் காரணமாக அவரது மகன் மஞ்சித் குமார்(5), மகள் ஜீவிதா(3) ஆகியோருக்கு விஷம் தந்து அவரும் விஷம் அருந்திய சம்பவத்தில் தேவி மற்றும் அவரது மகள் ஜீவிதா செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த தம்புரெட்டி பாளையம் பகுதியை  சேர்ந்தவர் சுரேஷ் மனைவி தேவி. இவர்களுக்கு மஞ்சித்குமார் என்ற மகனும், ஜீவிதா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் திருமணம் ஆனதில் இருந்தே சுரேஷ் குடிபோதையில் மனைவியிடம் அடிக்கடி  சண்டை இடுவது வழக்கமாக இருந்த நிலையில் கடந்த நவம்பர்-2014ல் தேவி கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுரேஷ் மீது புகார் கூறி அவருடன் வாழ விருப்பம் இல்லை என கூறியுள்ளார்.

Advertisement

இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் இனி மனைவியை கொடுமை படுத்த மாட்டேன், அவரை வைத்து நன்றாக வாழ்கிறேன் என்று எழுதி தந்த சுரேஷ் அவரது மனைவி தேவியை வீட்டிற்கு அழைத்து சென்றாலும் அவர் மாறவில்லை.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அதிகமாக குடித்து விட்டு வந்த சுரேஷ் தேவியுடன் சண்டை போட்டு அடித்துள்ளார். தொடர்ந்து திங்களன்று காலை சுரேஷ் தோட்டத்தில் இருந்து பறித்த மல்லிகைப்பூவை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றார்.அப்போது வீட்டில் யாரும் இல்லாத போது தேவி அவரது மகன் மஞ்சித்குமார் மற்றும் மகள் ஜீவிதாவிற்கு செடிகளுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை தந்து அவரும் அதை அருந்தி உள்ளார். இதனை தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்தவர்களை அக்கம் பக்கத்தார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் சிகிச்சை பலனின்று தேவியும் அவரை தொடர்ந்து அவரது மகள் ஜீவிதாவும் மரணமடைந்தனர். மஞ்சித் குமார் ஆபத்தான நிலையில் உள்ளார். இதனை தொடர்ந்து பொன்னேரி கொக்குமேடு பகுதியை சேர்ந்த தேவியின் தாயார் லலிதா(41) இது குறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கும்மிடிப்பூண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகி உள்ள சுரேஷை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.