நெல்லை மாவட்டத்தில் 1 லட்சம் வாழைகள் சேதம்
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி, களக்காடு பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் சுமார் 1 லட்சம் வாழைகள் சேதமடைந்ததாக விவாசயிகள் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி, களக்காடு பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் சுமார் 1 லட்சம் வாழைகள் சேதமடைந்ததாக விவாசயிகள் தெரிவித்தனர்.
நான்குனேரி, களக்காடு பகுதியில் திங்கள்கிழமை மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் நான்குனேரி வட்டாரத்தில் மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, முன்னங்குளம், பிள்ளைகுளம், சிங்கனேரி, பட்டன்பிள்ளைபுதூர், பெரும்பத்து, சேரன்மகாதேவி அருகே கங்கனாங்குளம், சடையபுரம், மேலச்செவல் அருகே காடுவெட்டி, சிங்கிகுளம், களக்காடு அருகே சீவலப்பேரி, படலையார்குளம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 1 லட்சம் வாழைகள் சாய்ந்து சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.