தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர்களாக மூப்பனார் பேரவை நிர்வாகிகள் நியமனம்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக சிதம்பரத்தைச் சேர்ந்த மூப்பனார் பேரவை நிர்வாகிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக சிதம்பரத்தைச் சேர்ந்த மூப்பனார் பேரவை நிர்வாகிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் மூப்பனார் பேரவை நிறுவனரும், பொதுச்செயலாளருமான ஜெமினி எம்.என்.ராதா, மூப்பனார் பேரவைத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் ஆகியோர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜி.ரங்கசாமி மூப்பனார், சுதாகர் மூப்பனார், சுரேஷ் மூப்பனார் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜெமினி எம்.என்.ராதா, 1987-ம் ஆண்டு முதல் மூப்பனார் பேரவையை தொடங்கி நடத்தி வருகிறார். 2000 ஆண்டு மூப்பனார் உயிரோடு இருக்கும் போது ஜி.கே.வாசன் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.