திராவிடர் கழகத்தை தடை செய்ய வேண்டும்: அர்ஜூன் சம்பத்
திராவிடர் கழகத்தை தடை செய்ய வேண்டும் என மத்தியஅரசை வலியுறுத்துவோம் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் தெரிவித்தார்.
திராவிடர் கழகத்தை தடை செய்ய வேண்டும் என மத்தியஅரசை வலியுறுத்துவோம் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் தெரிவித்தார்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு புதன்கிழமை வருகை தந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் திராவிடர்கழகத்தினர் அராஜக செயல் அதிகரித்துள்ளது. பெண்களை மனதினை துன்பபடுத்தும் தாலி அறுக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். தமிழர்கள் கோமாதா என தெய்வமாக கொண்டாடும் பசுமாட்டு இறைச்சி விருந்து நடத்துகின்றனர். மேட்டூர் காவல் நிலையத்தில் ஆயுதபூஜை நடத்தியபோது உள்ளே புகுந்து தாக்கியுள்ளனர். தமிழர்கள் தங்களது பாரம்பரிய பண்டிகையை கொண்டாட முடியாமல் தடுத்து வருகின்றனர். சென்னை மயிலாப்பூரில் 70 வயது அந்தணரை தாக்கி பூனூலை அறுத்துள்ளனர். அவரது மகன் குடுமியை அறுத்துள்ளனர். மேற்குமாம்பலத்தில் அந்தணர் ஒருவரின் பூனூலை அறுத்துள்ளனர்.
யாருக்கும் தீங்கு நினைக்காத அந்தணர்களை தொடர்ந்து தாக்கிவருவது கண்டனத்திற்குரியது. திராவிடர்கழகத்தினருக்கு நாங்கள் தக்க பதலடி கொடுப்போம். இந்து மக்களை தாக்கிவரும் திராவிடர் கழகத்தை தடை செய்ய வேண்டும். வீரமணி உள்ளிட்ட திராவிடர்கழக தலைவர்களை கைது செய்ய வேண்டும். சிதம்பரம் நகரில் வீதியில் உள்ள ஈ.வெ.ரா சிலையில் இந்து மக்களை புண்படுத்து வாசகங்களை எழுதியுள்ளனர். இதனை கும்பாபிஷேகத்திற்கு அகற்ற வேண்டும். அதேபோன்று திருச்சி டோல்கேட்டில் உள்ள பெரியார்சிலையில் தில்லைநடராஜருக்கு, ஸ்ரீரங்கநாதருக்கும் பீரங்கி வைத்து தகர்ப்போம் என எழுதி வைத்துள்ளனர். எனவே தமிழகம் முழுவதும் பெரியார்சிலை கல்வெட்டுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ள வாசகங்கள் அகற்றப்படாவிடில், இந்து மக்கள் கட்சி சார்பில் வருகிற மே.20-ம் தேதி கல்வெட்டை அகற்றும் போராட்டம் நடத்த உள்ளோம்.
பிராமணன் ஒருவர் கொல்லப்பட்டதால் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தொடங்கியவர் பிரபாகரன். திருப்போரூர் முருகன் கோயில் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டவர் பிரபாகரன். தாலி அறுக்கும் போராட்டத்திற்கு அவரது படத்தை வைத்து போராட்டம் நடத்துகின்றனர். அதுபோன்று இந்து மக்கள் மட்டும் போட்டியிடும். தனி தொகுதியை வரையறுத்தவர் அம்பேத்கர். மாட்டு இறைச்சி சாப்பிடக்கூடாது எனக் கூறியவர் அம்பேத்கர். அம்பேத்கர், பிரபாகரன் படத்தை பயன்படுத்தி போராட்டம் நடத்தும் திராவிடர் கழகத்தை வன்மையாக கண்டிக்கிறோம் என அர்ஜூன்சம்பத் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார், தஞ்சை மண்டலத் தலைவர் சாமிநாதன், நாகை மாவட்டத் தலைவர் பாலாஜி, மாநில அமைப்புக்குழுத் தலைவர் பொன்னுசாமி, உ.வெங்கடேச தீட்சிதர் ஆகியோர் உடனிருந்தனர்.