முகப்பு
தற்போதைய செய்திகள்

கஞ்சா கடத்தல்: கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கைது

கம்பத்திலிருந்து கேரளாவுக்கு பஸ்சில் கஞ்சா கடத்தியபோது, போலீஸ் சோதனை சாவடியில் பரிசோதனையில் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் ஞாயற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:20 AM
பகிர்:

கம்பத்திலிருந்து கேரளாவுக்கு பஸ்சில் கஞ்சா கடத்தியபோது, போலீஸ் சோதனை சாவடியில் பரிசோதனையில் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் ஞாயற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கம்பம் கம்பம் மெட்டு சாலையில் உள்ள தமிழக போலீஸார் சோதனை சாவடியில், சார்பு ஆய்வாளர் சுல்தான் பாட்ஷா தலைமையிலான போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கம்பத்திலிருந்து கேரளா சென்ற பஸ்சில் சோதனை செய்தபோது, சந்தேகப்படும் வகையில் 2 பேரிடம் பரிசோதனை செய்தபோது, அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

போலீஸார் தொடர் விசாரணையில், எர்ணாகுளத்தைச் சேர்ந்த பெரோஷ்கான்(43), ஆல்வாவைச் சேர்ந்த இப்ராஹீம்(38) என்று தெரியவந்தது. இவர்கள் கம்பத்தில் சேகர் என்பவரிடமிருந்து கஞ்சா வாங்கி கேரளாவில் கூடுதல் விலைக்க விற்க திட்டமிட்டுருந்ததாக விசாரனையில் தெரிவித்தனர். இவர்கள் இரண்டு பேரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.