கட்டி முடிக்கப்படாத கட்டடப்பணிக்கான தொகை ரூ.5 லட்சத்தை ரூ.30 ஆயிரம் அபராதத்துடன் பேராசிரியருக்கு வழங்க உத்தரவு
கட்டி முடிக்கப்படாத கட்டடப்பணிக்கான தொகை ரூ.5 லட்சத்தை ரூ.30 ஆயிரம் அபராதத்துடன் ஒரு மாதத்திற்குள் தர கட்டுமான நிறுவனத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போதைய செய்திகள்கட்டி முடிக்கப்படாத கட்டடப்பணிக்கான தொகை ரூ.5 லட்சத்தை ரூ.30 ஆயிரம் அபராதத்துடன் பேராசிரியருக்கு வழங்க உத்தரவு
கட்டி முடிக்கப்படாத கட்டடப்பணிக்கான தொகை ரூ.5 லட்சத்தை ரூ.30 ஆயிரம் அபராதத்துடன் ஒரு மாதத்திற்குள் தர கட்டுமான நிறுவனத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கட்டி முடிக்கப்படாத கட்டடப்பணிக்கான தொகை ரூ.5 லட்சத்தை ரூ.30 ஆயிரம் அபராதத்துடன் ஒரு மாதத்திற்குள் தர கட்டுமான நிறுவனத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர், பழையர டிரங் ரோடு பகுதியில் குடியிருந்து வருபவர் கு.ரெங்கசாமி. இவர் சாத்தூர் எஸ்.ஆர்.நாயுடு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள இடத்தை 23.7.2003-ம் தேதி கிரையப் பத்திரத்தின் மூலம் கிரையம் பெற்றுள்ளார். இந்த இடத்தில் கட்டுமானப் பணியை மேற்கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டம், வானரமுட்டி, ஜமீன் தேவர்குளம், வி.ராமலிங்காபுரத்தைச் சேர்ந்த ம.கண்ணன் என்பவரை அணுகியுள்ளார். இவர் ஸ்ரீபாலாஜி எஞ்ஜினியரிங் கன்சல்டிங் காண்ட்ராக்டர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இருவருக்கும் 31.8.2007-ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, முதல் தளத்தில் கட்டுமானம் செய்யப்பட வேண்டிய வேலைகளுக்கு ரூ.15,64,415 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டடம் கட்டுவதற்கு முன்பு இதில் முன் பணமாக ரூ.4 லட்சம் தர வேண்டும் என்றும், பேஸ்மட்டம் போட்டவுடன் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தரைத்தளம் போட்டவுடன் ரூ.3 லட்சம், முதல் தளம் ரூப் போட்டவுடன் ரூ.3.50 லட்சம், வேலை முடிந்தவுடன் ரூ.14,415 செலுத்த வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளை தரமானப் பொருட்களைக் கொண்டு 30.4.2008-க்குள் முடிக்க வேண்டும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் குறிப்பிட்ட காலத்தில் கட்டுமானப் பணியை முடிக்கவில்லையாம். 2009-ம் ஆண்டு மாசி மாதத்திற்குள் முடித்துத் தருவதாய் கூறியுள்ளார். இதனை ஒப்புக் கொண்ட ரெங்கசாமி, ஒப்பந்தத் தொகையை விட ரூ.1 லட்சம் கூடுதலாய் கண்ணன் கேட்டும், அதனையும் கொடுத்துள்ளார். இருந்தபோதும் கட்டுமானப் பணியை முடித்துத் தரவில்லையாம்.
இதனால் 3.4.2009-ம் தேதி பஞ்சாயத்தார் முன்னிலையில் அழைத்து பேசியுள்ளார்கள். 30.5.2009-க்குள் முழுமையாக முடித்துத் தருவதாயும் கூடுதலாய் பெற்ற ரூ.1 லட்சத்தைத் திருப்பித் தருவதாயும் கண்ணன் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அந்த தேதியிலும் பணிகள் நிறைவு பெறாமல் ரூ.5 லட்சம் மதிப்பீலான பணிகள் நிலுவையில் இருந்துள்ளது. இதனையடுத்து ரெங்கசாமி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி ஆகியோர் விசாரித்தனர்.
புகார் மனு அனுமதிக்கப்பட்டு, கட்டி முடிக்கப்படாத பணிகளுக்கான தொகை ரூ.5 லட்சத்தை, மனு தாக்கல் செய்த தேதியான 18.2.2010 லிருந்து, தொகை கொடுத்து தீர்க்கும் வரையான காலத்திற்கு 9 சதவீத வட்டியுடன் கண்ணன், ரெங்கசாமிக்கு திருப்பி செலுத்த வேண்டும். மன உளச்சல், மன வேதனை மற்றும் வீண் காலவிரயம் போன்றவற்றிற்காக ரூ.25 ஆயிரமும், வழக்குச் செலவிற்கு ரூ.5 ஆயிரமும் உத்தரவு தேதியிலிருந்து ஒரு மாதத்திற்கு தர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.