முகப்பு
தற்போதைய செய்திகள்

வன விலங்குகளை வேட்டையாட 22 நாட்டு வெடிகுண்டுகளுடன் சென்ற இளைஞர் கைது: ஒருவர் தப்பி ஓட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வன விலங்குகளை வேட்டையாட 22 நாட்டு வெடிகுண்டுகளுடன்

தற்போதைய செய்திகள்

வன விலங்குகளை வேட்டையாட 22 நாட்டு வெடிகுண்டுகளுடன் சென்ற இளைஞர் கைது: ஒருவர் தப்பி ஓட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வன விலங்குகளை வேட்டையாட 22 நாட்டு வெடிகுண்டுகளுடன்

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:26 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வன விலங்குகளை வேட்டையாட 22 நாட்டு வெடிகுண்டுகளுடன் சென்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவருடன் வந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், துப்பாக்கி சுடும் மைதானம் அருகே ரோந்து வாகன போலீஸார், சார்பு ஆய்வாளர் நடராஜன் தலைமையில் வியாழக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸ் வாகனத்தைப் பார்த்தவுடன் மோட்டார் சைக்கிளிலில் வந்த இளைஞர் திரும்பிச் செல்ல முயன்றுள்ளார். அவரை போலீஸார் சுற்றி வளைத்து  சோதனையிட்டபோது, ஒரு பையில் 22 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தார். அவருடன் வந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.

விசாரணையில் அவர், கோட்டையூர், கீழத்தெருவைச் சேர்ந்த செ.பாண்டி (25) என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, துப்பாக்கிச் சுடும் மைதானம் வழியே சென்று காப்புக் காட்டில் வெடிகுண்டுகளை வைத்து வன விலங்குகளை வேட்டையாடச் சென்றதாகக் கூறினார். தப்பி ஓடியவர் இவரது மைத்துனரான இதே இடத்தைச் சேர்ந்த பழனி மகன் பாண்டி (20) என்றும் தெரியவந்தது.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன், நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாண்டியைத் கைது செய்து வெடிகுண்டுகள் மற்றும் அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய பாண்டியைத் தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →