அங்கன்வாடி பணியாளர் தாக்கியதில் சிறுவனுக்கு ரத்தக் காயம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அங்கன்வாடிப் பணியாளர் தாக்கியதில் இரண்டரை வயது சிறுவனுக்கு உதட்டில் வெட்டுக் காயம் ஏற்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய செய்திகள்அங்கன்வாடி பணியாளர் தாக்கியதில் சிறுவனுக்கு ரத்தக் காயம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அங்கன்வாடிப் பணியாளர் தாக்கியதில் இரண்டரை வயது சிறுவனுக்கு உதட்டில் வெட்டுக் காயம் ஏற்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அங்கன்வாடிப் பணியாளர் தாக்கியதில் இரண்டரை வயது சிறுவனுக்கு உதட்டில் வெட்டுக் காயம் ஏற்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பாட்டக்குளம்-திருமலாபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (30). ஸ்ரீவில்லிபுத்தூர் ஆத்துக்கடை ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி தனலட்சுமி (22). இவர்களுக்கு இரண்டரை வயதில் அருண்பிரசாத், மோகன்பிரசாத் என்ற இரட்டைக் குழந்தைகள் உண்டு.
குழந்தைகளை திருமலாபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கடந்த 1 மாதமாக தனலட்சுமி விட்டு வந்துள்ளார். இந்நிலையில் திங்கள்கிழமை அங்கன்வாடி மையத்தில் மதியம் அருண்பிரசாத் அழுதுள்ளார். அங்கிருந்த மைய பொறுப்பாளர் மாரியம்மாள், அருண்பிரசாத்தை அடித்து தள்ளிவிட்டுள்ளார். இதில் சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ் மீது அவர் விழுந்ததில் உதட்டில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் வந்து சட்டையில் நனைந்துள்ளது. பின்னர் மைய உதவியாளர் சீத்தா சட்டையக் கழற்றி துவைத்துக் கொடுத்துள்ளார்.
இது பற்றி அறிந்ததும் தனலட்சுமி மையத்திற்கு விரைந்து சென்று பொறுப்பாளர் மாரியம்மாளிடம் கேட்டுள்ளார். அவர் முறையான பதில் கூறாமல், நாளைக்குப் பார்ப்போம் என்று பதில் கூறி அனுப்பிவிட்டாராம். இதனையடுத்து தனலட்சுமி 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து, குழந்தைகளை எடுத்துவந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இது குறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், பொறுப்பாளர் மனிதாபிமானமற்ற முறையில் குழந்தையை அடித்து சுவரில் முட்டவைத்துள்ளார். உடனடியாக முதலுதவி செய்யவோ, பெற்றோருக்கு தகவல் தரவோ அவர் முன்வராதது வருத்தத்துக்குரியது. மருத்துவமனையில் வந்தும் பார்க்வில்லை என்றனர். மாரியம்மாள் ஆகஸ்டு மாதம் இறுதியில் ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.