ஜிப்மர் ஸ்பந்தன் மாரத்தான் போட்டி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
புதுச்சேரி ஜிப்மர் மாணவர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்பந்தன் மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். ஜிப்மர் மாணவர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஸ்பந்தன் கலைவிழா 1 வாரம் நடைபெறும்.

இதன் ஒரு பகுதியாக மாரத்தான் போட்டியும் நடத்தப்படும். இதை முன்னிட்டு கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் பந்தயம் நடத்தப்பட்டது. ஜிப்மர் மைதானத்தில் மாரத்தான் பந்தயத்தை இயக்குநர் டாக்டர் எஸ்.சி.பரிஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒபன், கல்லூரி, பள்ளி என 3 பிரிவுகளாக ஆண்கள், பெண்களுக்கு போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் கடற்கரை காந்தி சிலையில் மாரத்தான் பந்தயம் நிறைவு பெற்றது.
முதுநிலை காவல் கண்காணிப்பாளர் விஜே.சந்திரன், கண் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் கே.ரமேஷ்குமார் பரிசளித்தனர். ஆதித்யா வித்யாஸ்ரமம் நிறுவனர்
சி.ஆனந்தன், தனியார் நிறுவன மேலாளர் செல்வரங்கன், தொழிலதிபர் கந்தன் நாராயணசாமி வாழ்த்திப் பேசினர்.
போட்டியில முதலிடம் பெற்றவர்கள் விவரம்: ஏ பிரிவு-பி.தங்கவேல் (8.5 கி.மீ), பி பிரிவு-செüந்தர்ராஜ் (7.2 கி.மீ), சி பிரிவு- திருநாவுக்கரசன் (4.5 கி.மீ). பெண்கள்: பி பிரிவு-சுகுணா (7.2 கி.மீ), சி பிரிவு-பி.நிவேதா (4.5 கி.மீ).