முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்த அகற்ற தேமுதிக வலியுறுத்தல்

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடியிருப்புகளைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்ற வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:41 AM
பகிர்:

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடியிருப்புகளைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்ற வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் எஸ். ஆறுமுகநயினார் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலர்கள் முருகையா பாண்டியன், அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தின்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ வசதி செய்துத் தர வேண்டும், குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.