ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக மாற்றுத் திறனாளிகள் நாள் விழிப்புணர்வு பேரணி
ஸ்ரீவில்லிபுத்தூர்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, புதன்கிழமை
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக மாற்றுத் திறனாளிகள் நாள் விழிப்புணர்வு பேரணி
ஸ்ரீவில்லிபுத்தூர்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, புதன்கிழமை
ஸ்ரீவில்லிபுத்தூர்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் மாற்றுத் திறனுடைய குழந்தைகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி, பேரணியைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில் கூறியதாவது: உலக மாற்றுத் திறனாளிகள் நாள் டிசம்பர் 3-ம் தேதி (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ் பலதரப்பட்ட சிறப்பு மாணவர்கள், மற்ற சக மாணவர்களுடன் இணைந்து படித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் சமூக வாழ்கையைில் தன்னம்பிக்கையுடன் செயல்பட வழி கிடைத்துள்ளது.
மேலும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு ஊன்றுகோலாக விளங்கிடும் உள்ளடக்கிய கல்வியின் வாயிலாக மாணவர்களை பயனடையச் செய்ய அவர்களை பள்ளியில் தக்கவைத்தல் வேண்டும். அதற்காக பல்வேறு செயல்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செய்து வருகிறது என்றார் அவர்.பேரணியில் ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.