ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தாமதம்
திருவதிகையில் செட்டிபட்டறை ஏரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதமாகவே நடைபெற்று வருகிறது.
திருவதிகையில் செட்டிபட்டறை ஏரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதமாகவே நடைபெற்று வருகிறது.
பண்ருட்டி அருகே திருவதிகையில் செட்டிபட்டறை ஏரி உள்ளது. சுமார் 5 கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் திருவதிகை, மேல்கவரப்பட்டு, கீழ் கவரப்பட்டு, மாளிகைமேடு உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள சுமார் 900 ஏக்கருக்கு மேலான பாசன வசதிகள் பெற்று விவசாயம் நடைபெற்று வந்தது.
இந்த தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள், விளைநிலங்களாக காட்சி அளித்து வருகின்றன.
இந்த நிலையில் பெய்து வரும் கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ளதால் 180க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதைடுத்து பண்ருட்டி சாமியார் தர்க்கா அருகே உள்ள மதகு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்ப்டடுள்ளதால் ரயில்வே சுரங்கபாதையின் 2 கண் பகுதிகளை அடைத்து வீடுகளை கட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேறு தடைப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், வருவாய்துறையினர் போராட்டத்தினர் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.
ஆனால் அப்பகுதியில் மீண்டும் ஆக்கிரமப்புகளை அகற்றும் பணி மந்தமாகவே நடைபெற்று வருகிறது.