முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வெடி பொருள் கண்டெடுப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சனிக்கிழமை வெடி பொருள் கண்டெடுக்கப்பட்டது.

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வெடி பொருள் கண்டெடுப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சனிக்கிழமை வெடி பொருள் கண்டெடுக்கப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:44 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சனிக்கிழமை வெடி பொருள் கண்டெடுக்கப்பட்டது.

ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ள நிலையில் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 20-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் டிசம்பர் 6 (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கவுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை கோவில் விமானத்திற்கு தங்கத்தகடு பதிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு அருகே வெடிபொருள் கிடந்துள்ளது.

 இது குறித்து வெடிகுண்டு தடுப்பு காவல் துறைக்கு தகவல் கிடைத்து அவர்கள் வந்து அந்த வெடி பொருளை கைப்பற்றினர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் வந்திருந்து பார்வையிட்டார். கோவிலில் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, கோவிலுக்கு மேலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →