சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: தொடர்ந்து 4-வது நாளாக குளிக்க தடை
மேகமலைப் பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், சுருளி அருவியில் ஞாயற்றுக்கிழமை முதல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தொடர்ந்து 4-வது நாளாளக இன்றும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
மேகமலைப் பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், சுருளி அருவியில் ஞாயற்றுக்கிழமை முதல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தொடர்ந்து 4-வது நாளாளக இன்றும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வடகிழக்கு பருவமழையால், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேகமலை பகுதியில் அதிகளவு மழை பெய்து வருவதால், அப்பகுதியில் உள்ள மணலாறு அணை, ஹைவேவிஸ், இரவங்கலாறு, வெண்ணியாறு ஆகிய அணைகள் நிரம்பியுள்ளது. தூவானம் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், மழை நீரும் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து வருவாதல், சுருளி அருவியில் தொடர்ந்து 4 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அணையிலிருந்து மரங்கள், கல், மணல் உள்ளிட்டவைகள் வருவதோடு, பயணிகள் நடந்து செல்லும் படிகளிலும் அருவி நீர் ஓடுகிறது. இதனால், மேகமலை வனஉயிரின சரணாலய அதிகாரிகள் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், பக்தர்களுக்கு குளிக்க தடை தொடர்ந்து 4 வது நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தெரியாமல், கேரளாவிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகளும், சபரிமலை சீசன் என்பதால் ஐய்யப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் அருவியில் குளிக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
மேலும், சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்லும் பாதையில் சோதனை சாவடியில் அறிவிப்பு செய்யப்பட்டிருப்பதோடு, அருவி பகுதிக்கும் யாரும் செல்லவிடாமல் பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த தடை மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என்று வனத்துறை தெரிவித்துள்ளனர்.