கடலூர் வெள்ளம் பாதித்த பகுதிக்கு நீதித்துறை, வழக்குரைஞர்கள் சார்பில் நிவாரணப் பொருட்கள்
கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிக்கு விருதுநகர் மாவட்ட நீதித்துறை மற்றும் வழக்குரைஞர்கள் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போதைய செய்திகள்கடலூர் வெள்ளம் பாதித்த பகுதிக்கு நீதித்துறை, வழக்குரைஞர்கள் சார்பில் நிவாரணப் பொருட்கள்
கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிக்கு விருதுநகர் மாவட்ட நீதித்துறை மற்றும் வழக்குரைஞர்கள் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிக்கு விருதுநகர் மாவட்ட நீதித்துறை மற்றும் வழக்குரைஞர்கள் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
கடலூர், குள்ளஞ்சாவடி அருகேயுள்ள புத்தூர் பகுதியில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்விற்குத் தேவையான உடை, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர் சங்கம், வழக்குரைஞர்கள் எழுத்தாளர் சங்கம், விருதுநகர் பார் அசோஸியேசன், விருதுநகர் அட்வகேட் அசோஸியேசன் ஆகியவை இணைந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்களைத் திரட்டியுள்ளன.இவற்றை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரா.தாரணி, விரைவு மகளிர் நீதிமன்ற நிதிபதி என்.ராஜலட்சுமி, மாவட்ட குற்றவியல் நீதிபதி வசந்தி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பசும்பொன் சண்முகையா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி நம்பிராஜ், விருதுநகர் சார்பு நிதிபதி பத்மா, ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர் சங்கச் செயலாளர் திருமலையப்பன் ஆகியோர் பார்வையிட்டு அனுப்பி வைத்தனர்.
இந்த நிவாரண மற்றும் மறுவாழ்வுக்குத் தேவையான பொருட்கள் கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தனபால் மூலம், புத்தூர் மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.