முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒருவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

தற்போதைய செய்திகள்

ஒருவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:51 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

கோட்டையூரைச் சேர்ந்தவர் தி.சுரேஷ் (29). இவருக்கும் அருகே குடியிருக்கும் நீ.மலைச்சாமி (50) என்பவருக்கும் கழிவுநீர் பாதை தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு கோட்டையூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து வந்து கொண்டிருந்த சுரேஷை வழி மறித்து தடுத்து நிறுத்தி, மலைச்சாமி தகராறு செய்துள்ளார். மேலும் சுரேஷைத் தாக்கியுள்ளார். இதில் சுரேஷ் அணிந்திருந்த 3 பவுன் செயின் அறுந்து கீழே விழுந்துள்ளது. இதில் 3-ல் இரு பாகம் மட்டுமே கிடைத்துள்ளது. இது குறித்து சுரேஷ், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மலைச்சாமியைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →