முகப்பு
தற்போதைய செய்திகள்

அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றால் மட்டுமே பாரதிய ஜனதாவுடன் கூட்டணி: ராமதாஸ்

தூத்துக்குடியில் மழை பாதித்த பகுதிகளான முத்தம்மாள்காலனி, ரஹ்மத் நகர் உள்ளிட்ட பகுதிகளை பாமக நிறுவனர் ராமதாஸ் பார்வையிட்டார். பின்னர் அவர் பேசும் போதும்  அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றால் மட்டுமே பாரதிய ஜனதாவுடன் கூட்டணி என்று கூறினார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:54 AM
பகிர்:

தூத்துக்குடியில் மழை பாதித்த பகுதிகளான முத்தம்மாள்காலனி, ரஹ்மத் நகர் உள்ளிட்ட பகுதிகளை பாமக நிறுவனர் ராமதாஸ் பார்வையிட்டார். பின்னர் அவர் பேசும் போதும்  அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றால் மட்டுமே பாரதிய ஜனதாவுடன் கூட்டணி என்று கூறினார்.

மேலும்
பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அவரைப் போல திறமை படைத்தவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லை.  வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் மட்டுமே பாரதிய ஜனதா கட்சியுடன் அமைக்க வாய்ப்பு உள்ளது.

அப்படி கூட்டணி அமைத்து போட்டியிட்டால் ஆட்சி அமைககும்போது பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி உள்ளிட்ட அதிகார பகிர்வு வழங்க தயாராக உள்ளோம்.  தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் எந்தவித வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை.

ஜெயலலிதா ஊழல் ராணியாகவும்,திமுக பட்டமரமாகவும் திகழ்கின்றனர். அதனால் பாட்டாளி மக்கள் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்த அவர், பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதாக இருக்கும். மேலும், முதல் பேரவைக் கூட்டத்தில் லோக் ஆயுக்த சட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.