வேப்பங்குப்பம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது
வேப்பங்குப்பம் அருகே 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவரை வேப்பங்குப்பம் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
வேப்பங்குப்பம் அருகே 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவரை வேப்பங்குப்பம் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
வேப்பங்குப்பம் அருகே இரு நபர்கள் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக வேப்பங்குப்பம் போலீஸôருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது முத்துக்குமரன் மலையடிவாரத்தில் அதே ஊரை சேர்ந்த பலராமன் மகன் மச்சரேகன் (27), பெரிய ஏரியூரை சேர்ந்த சக்கரை மகன் சீனிவாசன் (34) ஆகிய இருவரும் தலா ஒரு நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement