திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இலங்கை வடக்கு மாகாண சபையின் தீர்மானத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ஆதரவளிக்க....
இலங்கை வடக்கு மாகாண சபையின் தீர்மானத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ஆதரவளிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்செந்தூர் பேரூராட்சி அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலர் முரசு தமிழப்பன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சி.பா.பாரிவள்ளல், மாவட்ட அமைப்பாளர்கள் வணிகரணி திருவள்ளுவன், தொண்டரணி பொன் சுதாகர், முற்போக்கு மாணவர் கழகம் ந.இளையவளவன், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலர் ஜெயக்கொடி, மாவட்ட துணைச்செயலர் கன்னிமுத்து, திருச்செந்தூர் ஒன்றிய துணைச்செயலர் மு.தமிழ்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைப்பொதுச்செயலர் வெ.கனியமுதன், மகளிர் விடுதலை இயக்க மாநில துணைச்செயலர் இந்திரா, தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலர் செல்வக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்செந்தூர் ஒன்றிய செயலர் ஆ.சங்கத்தமிழன் வரவேற்புரையாற்றினார். முடிவில் நகர துணைச்செயர் சி.நந்தன் நன்றி கூறினார்.
Advertisement