குடும்பத் தலைவி வங்கிக் கணக்கில் ரூ.300 ரொக்கம் செலுத்த அரசு திட்டம்: திமுக வரவேற்பு
இலவச அரிசிக்கு பதிலாக ரூ.300 ரொக்கத்தை குடும்பத் தலைவின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்ற அரசின் திட்டத்தை திமுக வரவேற்றுள்ளது புதுச்சேரி மாநில திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மாநில அமைப்பாளர் டாக்டர் எம்ஏஎஸ்.சுப்பிரமமியன் தலைமை தாங்கினார்.

பொருளாளர் அனிபால் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஆர்.சோமசுந்தரம், முன்னாள் அமைச்சர் ந.மணிமாறன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.கே.பழனி, அருட்செல்வி, மல்லிகா மாயக்கிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மார்ச் 1ம் தேதி இளைஞர் எழுச்சி தினத்தை எளிய முறையில் 23 தொகுதிகளிலும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நட்டும், மனித நேயத்தை வளர்க்க ரத்ததானம், கண்தானம், செய்து கொண்டாட வேண்டும்.
திமுக விடுத்த கோரிக்கையை ஏற்று இலவச அரிசிக்கு பதிலாக வழங்கப்படும் ரூ.300 ரொக்கம் குடும்பத் தலைவி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்ற அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அதிகரித்து வசூலிக்கச் செய்யும் கட்டணத்தை அரசு மானியமாக வழங்க வலியுறுத்துவது.
புதுச்சேரி அரசின் கீழ் செயல்படும் பல்வேறு அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படாமல் இருப்பது தொடர்கதையாக உள்ளது. தற்கொலைகளை தடுக்கவும், மன உளைச்சல்களில் இருந்து காக்கவும் உடனடியாக சம்பளம் கொடுக்காத அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும்.உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.