முகப்பு
தற்போதைய செய்திகள்

நீர் இருப்பு குறைகிறது: நெல்லை மாவட்டத்தில் ராமநதி, கருப்பாநதி அணைகள் மூடல்

ராமநதி, கருப்பாநதி, குண்டாறு அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருவதை அடுத்து இவ்வணைகள் மூடப்பட்டன. பிரதான அணைகளின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:50 AM
பகிர்:

ராமநதி, கருப்பாநதி, குண்டாறு அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருவதை அடுத்து இவ்வணைகள் மூடப்பட்டன. பிரதான அணைகளின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளின் நீர் இருப்பு கடந்த ஆண்டை விட 45 சதவீதம் கூடுதலாக உள்ளது. எனினும் குறைந்த கொள்ளளவை கொண்ட அணைகளின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. 42.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.50 அடியாக குறைந்த அடுத்து மூடப்பட்டது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி 84 அடி கொள்ளளவு உள்ள ராமநதி அணையின் நீர்மட்டம் 25 அடியாகவும், 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 24.67 அடியாகவும், 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணையின் நீர்மட்டம் 21.30 அடியாகவும் இருந்தது.

இவ்வணைகளின் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில் நீர்வரத்தும் இல்லாததால் மேற்கண்ட 3 அணைகளும் மூடப்பட்டன. ராமநதி அணைக்கு வந்து கொண்டிருந்த 5 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு வந்து கொண்டிருந்த 2 கனஅடியும், குண்டாறு அணைக்கு வந்து கொண்டிருந்த 1.37 கனஅடி தண்ணீர் மட்டுமே அணைகளில் இருந்து கசிந்து வருகிறது.

இம்மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் 4 அணைகள் மூடப்பட்ட சூழலில் 84 கொள்ளளவு கொண்ட கடனாநதி அணை, 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை, 22 அடி கொள்ளளவு கொண்ட நம்பியாறு அணை ஆகிய அணைகளின் நீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது. பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டமும் 100 அடிக்கும் குறைவாக உள்ளது.

நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 90.80 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 96.13 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 96.31 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 33 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 37.50 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 41.75 அடியாகவும் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →