முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி அருகே கட்டையால் அடித்து பெண் ஒருவர் கொலை

பழனி அருகே பெண் ஒருவர் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார். பழனி அருகே பெருமாள்புதூர் சண்முகம்பாறை பிரிவை சேர்ந்தவர் அழகு.  இவரது மனைவி நாகம்மாள் என்ற லிங்கம்மாள்(36).

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:50 AM
பகிர்:

பழனி அருகே பெண் ஒருவர் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார். பழனி அருகே பெருமாள்புதூர் சண்முகம்பாறை பிரிவை சேர்ந்தவர் அழகு.  இவரது மனைவி நாகம்மாள் என்ற லிங்கம்மாள்(36).

 இவர்களுக்கு கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இரு ஆண்குழந்தைகள் உள்ளது.  இந்நிலையில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு பெருமாள்புதூர் புளியம்பட்டி பிரிவை சேர்ந்த ரங்கநாதன்(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு குழந்தைகளை பிரிந்து இவருடன் வாழ்ந்து வருகிறார்.  (37). ரங்கநாதன் டிரைவராக உள்ளார். இந்நிலையில் நாகம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாக ரங்கநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.  வியாழக்கிழமை இரவு இது தொடர்பாக மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.  தகராறு முற்றிய நிலையில் ரங்கநாதன் அருகே இருந்த கட்டையை எடுத்து நாகேஸ்வரியை சரமாரியாக தாக்கியதில் நாகேஸ்வரி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.  இதைத் தொடர்ந்து ரங்கநாதன் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.