முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் இரண்டாவது மனைவி கழுத்து நெரித்து கொலை: கணவர் தப்பி ஓட்டம்

சிதம்பரம் சிவசக்திநகர் முதல் குறுக்குத்தெருவில் வசிப்பவர் சேகர் (42). இவருக்கு தேவிகா (38), அம்பிகா (35) என்ற இரு மனைவிகள் உள்ளனர். இருவரும் அக்கா, தங்கை ஆவார்கள். இருமனைவிகளும் ஒரே

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

சிதம்பரத்தில் இரண்டாவது மனைவி கழுத்து நெரித்து கொலை செய்த கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம் சிவசக்திநகர் முதல் குறுக்குத்தெருவில் வசிப்பவர் சேகர் (42). இவருக்கு தேவிகா (38), அம்பிகா (35) என்ற இரு மனைவிகள் உள்ளனர். இருவரும் அக்கா, தங்கை ஆவார்கள். இருமனைவிகளும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். அம்பிகாவிற்கு 15 வயதில் 10 வகுப்பு பயிலும் மகன் ஒருவன் உள்ளான்.

இரண்டாவது மனைவி அம்பிகாவின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டு கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை காலை அம்பிகாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அம்பிகா மயங்கி கீழி விழுந்தார். இதனையடுத்து கணவர் சேகர் தப்பிஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அம்பிகாவிலை அவரது அக்கா தேவிகா அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு கழுத்து நெரித்ததில் அம்பிகா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தேவிகா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் வழக்குப் பதிந்து தலைமறைவான சேகரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.