முகப்பு
தற்போதைய செய்திகள்

காணும் பொங்கல்: சிதம்பரம் நடராஜர்கோயிலில் கிராமிய கலைநிகழ்ச்சிகள்

காணும் பொங்கலை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சனிக்கிழமை சிதம்பரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். 

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

காணும் பொங்கலை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சனிக்கிழமை சிதம்பரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். 

மேலும் ஸ்ரீநடராஜர் கோயில் வளாகத்தில் பெண்கள் பங்கேற்ற கோலாட்டம், கும்மியடித்தல், கோ-கோ மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற சிலம்பாட்டம், கபடி போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு கிராமிய விளையாட்டுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ரா.எல்லாளன் தலைமையில் சுமார் நூறு மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.  

பிச்சாவரத்தில் அலை மோதிய கூட்டம்:  சிதம்பரத்தை அருகே சுரபுண்ணை காடுகள் அடங்கிய பிச்சாவரத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு படகுசவாரி செய்ய அதிகமானார் வந்ததால் கூட்டம் அலை மோதியது. வெளி மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகளும், வெளிநாட்டு பயணிகளும் ஏராளமானோர் வந்தனர். இதனால் படகுசவாரி செய்யும் இடத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.