முகப்பு
தற்போதைய செய்திகள்

என்.எல்.சி இயக்குநருக்கு சிறப்பு விருது!

பிரபல மனிதவள மேம்பாட்டு நிறுவனமான டாப்ரேங்கர்ஸ் மேலாண்மை ஆலோசனை நிறுவனமும், முன்னணி மேலாண்மைக்கல்வி நிலையமான ஜின்டால் உலக வரத்தக் கல்லூரியும் இணைந்து நெய்வேலி

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

பிரபல மனிதவள மேம்பாட்டு நிறுவனமான டாப்ரேங்கர்ஸ் மேலாண்மை ஆலோசனை நிறுவனமும், முன்னணி மேலாண்மைக்கல்வி நிலையமான ஜின்டால் உலக வரத்தக் கல்லூரியும் இணைந்து நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன மனிதவளத்துறை இயக்குநர் சரத்குமார் ஆச்சார்யாவிற்கு சிறந்த தலைமைப்பன்பு மிக்க அதிகாரிக்கான சிறப்பு விருதை வழங்கியுள்ளது.

இரு முக்கியத்துறைகளில் தலைசிறந்து விளங்கும் டாப்ரேங்கர்ஸ் மேலாண்மை ஆலோசனை நிறுவனமும், ஜின்டால் உலக வர்த்தக கல்லூரியும் இணைந்து புதுதில்லியில் ஜன.16,17 தேதிகளில் 16வது தேசிய மேலாண்மை மாநாட்டினை நடத்தின. இம்மாநாட்டில் தலைசிறந்த மனிதவள வல்லுநர்களான பத்மஸ்ரீ டாக்டர் பிரீதம் சிங், ஜின்டால் உலக வர்த்தக கல்லூரி புல முதல்வர் டாக்டர் சி.கோபிநாத், பெட்ரோ நெட் எல்என்ஜி நிறுவன மேலாண் இயக்குநர் ஏ.கே.பால்யன், டாப்ரேங்கர்ஸ் மேலாண்மை ஆலோசனை நிலைய மேலாண் இயக்குநர் வி.எஸ்.கே.சூட், பத்திரிகை பதிவுத்துறை பொது இயக்குநர் எஸ்.எம்.கான் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். இம்மாநாட்டில் என்எல்சி நிறுவனத்தின் மனிதவளத்துறை இயக்குநர் சரத்குமார் ஆச்சாரியாவிற்கு சிறந்த தலைமைப் பண்பு மிக்க அதிகாரிக்கான விருதினை பத்மஸ்ரீ டாக்டர் பிரீதம்சிங் வழங்கி கவுரவித்தார்.

மேலும் ஆசிய-பசிபிக் மனிதவள மாநாட்டில் வெியிடப்பட்ட இந்தியாவின் திறமை வாய்ந்த மனிதவள அதிகாரிகள் என்ற புத்தகத்தில் ஆச்சார்யா பெயர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான கல்வி நிலையம் உலகளாவிய தொலைநோக்கு கொண்ட மனிதவளத்துறை அதிகாரிக்கான விருதை ஆச்சாரியாவிற்கு வழங்கியுள்ளது. புதுதி்ல்லியில் வழங்கிய விருது, ஆச்சாரியா என்எல்சி மனிதவளத்துறை இயக்குநராக பொறுப்பேற்ற பின்னர் பெறும் எட்டாவது விருது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.