முகப்பு
தற்போதைய செய்திகள்

மது போதையில் பெண்கள் மீது தாக்குதல்: 7 பேர் மீது வழக்குப் பதிவு

நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள தில்லையாடியில் சனிக்கிழமை இரவு மது போதையில் தகராறில் ஈடுபட்டு பெண்களை  தாக்கிய 7 பேர் மீது  போலீசார் வழக்குப் பதிவு செய்து  தேடி

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள தில்லையாடியில் சனிக்கிழமை இரவு மது போதையில் தகராறில் ஈடுபட்டு பெண்களை  தாக்கிய 7 பேர் மீது  போலீசார் வழக்குப் பதிவு செய்து  தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது,

தில்லையாடி  உத்திராபதியார் கோயில் தெரு பகுதியில் சனிக்கிழமை இரவு கும்பலாக சிலர் மது அருந்தி கொண்டும்,கூச்சலிட்டுக் கொண்டும் இருந்துள்ளனர்.அப்போது அப்பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மனைவி அசுபதி (58) என்பவர் அங்கிருந்தவர்களிடம் கூச்சலிட்டுக் கொண்டிருப்பது குறித்து கேட்டுள்ளார்.அப்போது மேலும் கும்பலாக வந்த  பலர் கட்டையாலும்,கத்தியாலும் அவரை தாக்கியுள்ளனர்.அப்போது அங்கு வந்த அதே தெருவைச் சேர்ந்த சிவக்குமார் மனைவி சாந்தி (30) என்பவரையும் தாக்கியுள்ளனர்.பின்னர் கும்பலாக திரும்பி சென்ற அவர்கள் அப்பகுதியில் இருந்த தெரு விளக்குகள்,குடிநீர் கை பம்பு ஆகியவற்றையும் உடைத்துவிட்டு சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொறையாறு காவல் ஆய்வாளர் மணிமாறன்,சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேலும் பிரச்சினை ஏற்படாதவாறும்,சேதமான தெரு விளக்குகள் மற்றும் சம்பவம் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

பலத்த காயமடைந்த அசுபதி,சாந்தி ஆகியோர் பொறையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.இது குறித்து காயமடைந்த அசுபதி மற்றும் தெரு விளக்குகள் உடைக்கப்பட்டது குறித்து தில்லையாடி ஊராட்சி தலைவர் நடராஜன் ஆகியோர் தனித்தனியே பொறையாறு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தனர்.

இரு புகார்களின் பேரில் பெண்களை தாக்கியது,மானபங்கபடுத்தியது,கொலை மிரட்டல் விடுத்தது,பொது சொத்துக்கு சேதம் விளைத்தது உள்ளிட்ட 7 பிரிவுகளில் தில்லையாடி வள்ளியம்மை நகரைச் சேர்ந்த முருகவேல்,அகோரமூர்த்தி,ராஜ்குமார்,ராஜதுரை,மேத்யூ,கலைவாணன்,பிரசாத் ஆகிய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

தில்லையாடியில் பதட்டமான சூழல் நிலவியதால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments