மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கவேண்டும்,புதிய பேருந்து நிலையம் அமைக்கவேண்டும்,புறவழிச்சாலை அமைக்கும் பணியை உடனடியாகத் துவங்கவேண்டும்,
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கவேண்டும்,புதிய பேருந்து நிலையம் அமைக்கவேண்டும்,புறவழிச்சாலை அமைக்கும் பணியை உடனடியாகத் துவங்கவேண்டும்,பெரியார் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவேண்டும் என்பன பல்வேறு உள்ளிட்ட மயிலாடுதுறை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறவேற்றவேண்டும் என்பன வலியுறுத்தி,தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்எல்ஏ ஆர்.அருள்செல்வன் ஜனவரி 20-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவிப்பு செய்து பல்வேறு அரசியல் கட்சியினர்கள்,பொதுமக்கள்,வணிகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் ஆதரவுத் திரட்டி வருகின்றார்.
இந்நிலையில்,மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள கிட்டப்பா அங்காடி முன்பு(காந்திஜி சாலை)உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு அனுமதியளிக்கவேண்டும் எனவும்,அதற்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும் தேமுதிக நகர செயலாளர் பண்ணை சொ.பாலு மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளருக்கு கடிதம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து,போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நலன் கருதியும்,கிட்டப்பா அங்காடி முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு,நாகை மாவட்ட காவல் துறையின் உத்திரவின்பேரில்,காவல் ஆய்வாளர் பி.செல்வம் அனுமதி மறுத்துள்ளார்.
காவல்துறை அளித்துள்ள அனுமதி மறுப்புக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது:
மயிலாடுதுறை பகுதிகளில் தற்போது நிலவும் சட்டம்,ஒழுங்கு சூழ்நிலை,குடியரசு தின விழா,உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படவுள்ள இடத்தில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல்,வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்படும் இடையூறு ஆகிவற்றை கருத்தில் கொண்டு கிட்டப்பா அங்காடி முன்பு தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது என அந்த அனுமதி மறுப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.