முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை: மாநகராட்சியில் திமுக கவுன்சிலர் திடீர் தர்னா!

மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த 52 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜி. ராமக்கிருஷ்ணன், மேயர் அறை முன்பு அமர்ந்து திடீரென தர்னாவில்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் மனு அளிக்க திமுக மாமன்ற உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், திடீர் தர்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த 52 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜி. ராமக்கிருஷ்ணன், மேயர் அறை முன்பு அமர்ந்து திடீரென தர்னாவில் ஈடுபட்டார்.அப்போது அவர் கூறியதாவது:

என்னுடைய வார்டில் அனைத்துப் பகுதியிலும் குப்பைகள் தேங்கி உள்ளன. கழிவுநீர் ஓடைகளில் குப்பைகள் தேங்கிய நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. ஓடைகளில் இருந்து கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். தினமும் வார்டில் அனைத்து தெருக்களிலும் துப்புரவு பணியினை மேற்கொள்ள வேண்டும்.

குப்பையினை சரியான நேரத்திற்கு துப்புரவு பணியாளர்கள் சேகரிக்க வருவதில்லை. கொசுத் தொல்லை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வார்டு முழுவதும் கொசு மருந்து தெளிக்க வேண்டும். சுகாதார சீர்கேடுகள் அதிகரித்துள்ளதால் டெங்கு போன்ற காய்ச்சல் தாக்கும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே பொதுமக்கள் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் எனது வார்டில் முழு அளவில் சுகாதாரப் பணியினை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர். சுமார் அரை மணி நேரம் தர்னாவில் ஈடுபட்ட அவர், கோரிக்கையை வலியுறுத்தி ஆணையர், மேயரிடம் புகார் மனு அளித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →