சிதம்பரத்தில் ஜவுளி கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
சிதம்பரம் சிவசக்திநகரைச் சேர்ந்தவர் ராஜூதின்சேட் (60). இவர் சிதம்பரம் மந்தகரை பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில மாதமாக வியாபாரம் சரியாக ஆகாததால் கடன் வாங்கி
சிதம்பரத்தில் கடன் தொல்லையால் ஜவுளி கடை உரிமையாளர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம் சிவசக்திநகரைச் சேர்ந்தவர் ராஜூதின்சேட் (60). இவர் சிதம்பரம் மந்தகரை பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில மாதமாக வியாபாரம் சரியாக ஆகாததால் கடன் வாங்கி தர வேண்டிய பணத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து அவரது மகன் முகமது இப்ராஹீம் அளித்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.