முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி அருகே சிந்துசமவெளி நாகரீக எழுத்துடன் கூடிய கற்கால கருவி கண்டுபிடிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தின் வடக்கு எல்லை மற்றும் கரூர் மாவட்டத்திலன் தெற்கு எல்லைக்கு இடைப்பட்ட பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, ஆர்வலர் வெங்கடேசன் ஆகியோர்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

பழனி அருகே தி.கூடலூரில் சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கற்கால கருவி சிந்துசமவெளி எழுத்துடன் கண்டறியப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் வடக்கு எல்லை மற்றும் கரூர் மாவட்டத்திலன் தெற்கு எல்லைக்கு இடைப்பட்ட பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, ஆர்வலர் வெங்கடேசன் ஆகியோர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது தி.கூடலூருக்கு அருகே உள்ள மண்மேடான பகுதியில் கற்கால கருவி கேட்பாரற்று இருந்ததை கண்டறிந்தனர்.  புதிய கற்காலத்தை சேர்ந்த இந்த பொருள் குவார்ட்ஸ் கல்லால் செதுக்கி மெருகூட்டப்பட்டுள்ளது.  உடைந்த நிலையில் இந்த பொருள் கண்டறியப்பட்டதால் இதை கற்கால மனிதர்கள் விட்டு சென்றிருக்கலாம் என்பது தெரியவருகிறது. 

இதன் காலம் ஏறத்தாழ 4,500 ஆண்டுகள் ஆகும்.  இதன் எடை சுமார் 216 கிராம் ஆகும்.  நீளம் 8 செ.மீ. குறுக்கு சுற்றளவு 13செ.மீ ஆகும். கருவியின் முனைப்பகுதியும், பின்பகுதியும் உடைந்துள்ள நிலையில் இதை கற்கால மனிதர்கள் வேட்டைக்கு பயன்படுத்தியிருக்கலாம்.   இந்த கருவியின் மேலே உள்ள எழுத்துதான் இதன் சிறப்பம்சமாகும்.  இந்த எழுத்து சிந்துசமவெளியில் கண்டுபிடிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்ட 396வது எழுத்துடன் ஒத்துப்போகிறது. இந்த சின்னமானது இதை பயன்படுத்துவோரை தனிப்படுத்தி காண பயன்படுத்தியிருக்கலாம். 

ஒரு பகுதியில் மிககூராக செதுக்கப்படும் இந்த ஆயுதம் வில்லில் வைத்து வீசும்போது விலங்குகளை கிழித்து கொன்றுவிடும். திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, பழனியை அடுத்த கரடிகூட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சிந்து சமவெளி எழுத்துக்கள் முன்னரே கிடைத்துள்ளது.  சிந்து சமவெளி நாகரீகமும், தமிழர் நாகரீகமும் ஒன்றே என்பதற்கு அவ்வப்போது தமிழ்நாட்டில் ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளது.  பழனிமலையின் பின்புறம் சிந்துசமவெளி நாகரீகத்தை ஒத்த தமிழர்கள் நாகரீகம் இருந்ததற்கான சான்றுகளும் நதியோரம் கிடைத்துள்ளது.  அந்த வகையில் தற்போது கிடைத்துள்ள புதிய கற்கால கருவி இக்கருத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.