ஸ்ரீமுஷ்ணத்தில் கோயில் பதாகையை கிழித்த சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலைமறியல், காவல் நிலையம் முற்றுகை
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கோயில் கும்பாபிஷேக விழா பதாகைகளை கிழித்த சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டும், சாலைமறியலில் ஈடுபட்டும் பொதுமக்கள் போராட்டத்தில்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கோயில் கும்பாபிஷேக விழா பதாகைகளை கிழித்த சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டும், சாலைமறியலில் ஈடுபட்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் திருபாானாழ்வார் தெருவிலை அமைந்துள்ள ஸ்ரீபாளையத்தம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த ஜன.23-ம் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அப்பகுதியில் சாலையோரம் விளம்பர பதாகைகளை பொதுமக்களால் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திகணேஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோரம் இருந்த கும்பாபிஷேக விழா விளம்பர பதாகைகளை கிழித்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் பதாகைகளை கிழித்த சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கேட்டனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சிதம்பரம்-ஸ்ரீமுஷ்ணம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுரேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சப்-இன்ஸ்பெக்டர் மீது துறை வாரி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.