வீராணம்ஏரி நீர்மட்டம்: முழுக்கொள்ளவை எட்டியது
கடந்த 2014ம் ஆண்டு ஆக.10-ம் தேதி மேட்டூரிலிருந்து கல்லணைக்கு நீர் திறந்துவிடப்பட்டது. கல்லணையிலிருந்து கடந்த ஆக.14-ம் தேதி நீர் திறந்துவிடப்பட்டது. கல்லணையிலிருந்து
கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி நீர்மட்டம் முழுக்கொள்ளவை எட்டியது.
கடந்த 2014ம் ஆண்டு ஆக.10-ம் தேதி மேட்டூரிலிருந்து கல்லணைக்கு நீர் திறந்துவிடப்பட்டது. கல்லணையிலிருந்து கடந்த ஆக.14-ம் தேதி நீர் திறந்துவிடப்பட்டது. கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் கீழணைக்கு ஆக.21-ம் தேதி வந்து சேர்ந்தது. அதன் பின்னர் கீழணையிலிருந்து ஆக.22-ம் தேதி முதல் படிப்படியாக வீராணம்ஏரிக்கு வடவாறு வழியாக நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு நீர் அனுப்பப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக ஏரியாக வீராணம்ஏரி திகழ்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கீழணையிலிருந்து விநாடிக்கு சுமார் ஆயிரம் கனஅடிநீர் திறந்துவிடப்பட்டது. தற்போது விநாடிக்கு ஏரிக்கு 685 கனஅடி நீர் வருகிறது. இதனால் வீராணம்ஏரியின் நீர்மட்டம் 47.05 அடியாக (முழுக்கொள்ளளவு 47.50 அடி) உயர்ந்து முழுக்கொள்ளளவுடன் காட்சியள்கிறது. ஏரியிலிருந்து பாசனத்திற்கு விநாடிக்கு 365 கனஅடியும், சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 74 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.