முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனியில் முதியவர்கள், குழந்தைகளுக்கு குளிப்பதற்கு கட்டணமில்லாமல் வெந்நீர் - அமைச்சர் காமராஜ் துவக்கம்.

பழனி சண்முகநதி மற்றும் சரவணப் பொய்கையில் திருக்கோயில் சார்பில் குழந்தைகள், முதியவர்களுக்கு கட்டணமில்லா வெந்நீர் வழங்கும் திட்டத்தை உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

பழனி சண்முகநதி மற்றும் சரவணப்பொய்கையில் திருக்கோயில் சார்பில் குழந்தைகள், முதியவர்களுக்கு கட்டணமில்லா வெந்நீர் வழங்கும் திட்டத்தை உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்தார்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடத்துவது குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் இந்துசமயம் அறநிலையத்துறை ஆணையர் தனபால், மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தஆய்வுக் கூட்டத்தில் உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் காமராஜ் பங்கேற்று தைப்பூச ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் அவர் தெரிவித்ததாவது, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் மலைக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு போதுமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி வழங்கவும், கழிப்பிட வசதிசெய்து தரவும்,பக்தர்கள் சிரமமின்றி வசதியாக வரிசையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில் நிர்வாகம் மூலம் கிரிவீதிகளில், சுற்றுலா கட்டணமில்லாவாகன நிறுத்தம்,கோசாலா கட்டணமில்லா பேருந்து நிறுத்தம் மற்றும் பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் குடிநீர், சுகாதாரம்,குளியலறை மற்றும் கழிப்பிட வசதிகள் போதுமான அளவிற்கு அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருக்கோயில் நிர்வாகம் மூலம் சரவணப்பொய்கை மற்றும் சண்முகநதி பகுதியில் குழந்தைககள், சிறுவர், ,சிறுமியர் மற்றும் முதியவர்கள் குளிப்பதற்கு சுடுநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில் நிர்வாகம் மூலம் பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி மலைக்கோயில் மற்றும் குடமுழுக்குநினைவரங்கு வளாகம்,கோசாலா மற்றும் சுற்றுலாபேருந்து நிலையங்கள், பாதவிநாயகர் திருக்கோயில் அருகில் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமிரா அமைத்து காவல்துறை மூலம் பாதுகாப்புபணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவல்துறை மூலம் பாதயாத்திரையாக பழநிக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதி துண்டுபிரசுரங்களும்,ஒளிரும் குச்சிகள்,ஒளிரும் ஸ்டிக்கர் போன்றவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை மூலம் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஒலிபெருக்கியில் பொது அறிவிப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவத்துறை மூலம் பக்தர்களின் நலன் கருதி மலைக்கோயில், இடும்பன் கோயில் அருகில் கீழ்வின்ச் நிலையம்,பாதவிநாயகர்கோயில்,  மீனாட்சிகோயிலிலும், குடமுழுக்குவளாகத்திலும் மருத்துவக்குழு அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் புனித நீராடும், இடும்பன் குளம்,சண்முகநதி ஆகிய இடங்களில் இரப்பர் படகு ,லைப் ஜாக்கெட், இரப்பர் மிதவைகள் ஆகிய சாதனங்களுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் மீட்புபணிக்கு தயார் நிலையில் இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி வாகம் மூலம் பேருந்துநிலையங்கள் மற்றும் தெருக்களில் போதியசுகாதாரம்,சுத்திகாpக்கப்பட்டகுடிநீh;,நோய் தடுப்புநடவடிக்கைகள் மேற்கொள்ளஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பழனிக்கு வருகைதரும் பக்தர்களுக்கு அரசுப் போக்குவரத்துகழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் வசதி செய்துதர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருக்கோயிலின் வின்ச் நிலையம் மற்றும் ரோப்கார் நிலையத்தில் மின்னணு நுழைவுச் சீட்டுவழங்கும் முறையில் பக்தர்களுக்கு கட்டணச்சீட்டு வழங்கும் பயன்பாட்டினை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலில் தங்கரதப் புறப்பாடு ஆன்லைன் மூலம் பதிவுசெய்யும் முறை பக்தர்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சரவணப் பொய்கையில் முதியவர்கள், குழந்தைகள்,பக்தர்களின் வசதிக்காக கட்டணமில்லாமல் குளிப்பதற்கு வெந்நீர் வழங்குவதை தொடங்கி வைத்தும்,பழனி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள, ரோப்கார் இழுவை ரயிலுக்கான கட்டணசீட்டுகள் காலதாமதமின்றி வழங்கப்பட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மின்னணு நுழைவுச் சீட்டுமுறையினையும் அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

இந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பழனி சட்டமன்றஉறுப்பினர் வேணுகோபாலு, மாவட்டகாவல் கண்காணிப்பாளர் சரவணன், இணைஆணையர் (பொறுப்பு) ராஜமாணிக்கம், மதுரை இணைஆணையர் நடராஜன், பழனிவருவாய் கோட்டாட்சியர் கீதா, உதவி ஆணையர் மேனகா, நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம்,  உள்ளிட்ட அரசுஅலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.