முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலில் தவறி விழுந்த மீனவர் சடலமாக மீட்பு

தூத்துக்குடி அருகே நடுக்கடலில்  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி கடலுக்குள் விழுந்த மீனவர் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:53 AM
பகிர்:

தூத்துக்குடி அருகே நடுக்கடலில்  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி கடலுக்குள் விழுந்த மீனவர் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

 தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த நசரேன் மகன் ராஜா (32).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் 9 பேருடன் கடந்த 1 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். கரையில் இருந்து 13 கடல் மைல் தொலைவில் சென்றதும் மீனவர்கள் 8 பேர் தனித்தனியே சிறிய அளவிலான படகில் (போயா) கனவாய் மீன் பிடிக்க சென்றனர்.

அப்போது, திடீரென மீனவர் ராஜா கடலில் தவறி விழுந்தார்.  உடனே, சக மீனவர்கள் ராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தருவைக்குளத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீஸôருக்கும் அவர்கள் தகவல் அளித்தனர்.

போலீஸôரும், மீனவர்களும் இணைந்து ராஜாவை கடந்த இரண்டு நாள்களாக தேடி வந்த நிலையில்,  வெள்ளிக்கிழமை ராஜா சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை மீட்ட போலீஸôர் படகு மூலம் கரைக்கு கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.