முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரளாவுக்கு கஞ்சா கடத்தல்:  பெண் உட்பட 4 பேர் கைது

கம்பத்திலிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை கேரளாவுக்க கடத்திச் சென்ற பெண் உட்பட நான்கு பேரை லோயர் சோதனைச்சாவடியில் போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:55 AM
பகிர்:

கம்பத்திலிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை கேரளாவுக்க கடத்திச் சென்ற பெண் உட்பட நான்கு பேரை லோயர் சோதனைச்சாவடியில் போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர்.

தமிழகப்பகுதியிலிருந்து, கேரளாவுக்கு கஞ்சா கடத்துவது, நாள்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கிலோ 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா, கேரள மாநிலத்தில் கிலோ 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கேரளாவைச்சேர்ந்த சில முதியவர்களும், வாலிபர்களும், கல்லூரி மாணவர்களும் தற்போது கஞ்சா கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

திங்கட்கிழமை குமுளியிலுள்ள தமிழக போலீஸ் சோதனைச்சாவடியில் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் முருகேசன், குமரேசன் ஆகியயோர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டு ஒரு பெண் மற்றும் இரண்டு வாலிபர்களும் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மலைச்சாலையில் நடந்து வருவது குறித்து போலீசார் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி உள்ளனர். இதனால் போலீஸார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் அரைக்கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த பிரசன்னா மகள் நிதுன்(26), எர்ணாகுளம் வின்சென்ட் மகன் வினோத்(26), கொச்சி சையது முகம்மது மகன் சபீர்(27) என தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார்  மூவரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து சிறிது நேரத்தில், அப்பகுதி வழியாக குமுளி சென்ற அரசுப்பேருந்தில் போலீஸார் சோதனை செய்தனர். அதில் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாரைச் சேர்ந்த குமார்(60) ஒருகிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த சோதனை சாவடி போலீஸார் குமாரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.