தற்போதைய செய்திகள்

இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல்

இளநிலை பயிற்சி அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

எஸ். பாண்டியன்

இளநிலை பயிற்சி அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: இப்பணிக்காலியிடங்களுக்கு கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் பதிவு மூப்பு உள்ளிட்ட பரிந்துரை www.virudhunagar,nic.in என்ற விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

அதை இம்மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள பதிவுதாரர்கள் பார்வையிட்டு தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும் விவரங்களை உறுதி செய்து கொள்வது அவசியம் ஆகும். இதில், தகுதியுடைய பதிவுதாரர்கள் பெயர்கள் விடுபட்டிருந்தால் வருகிற ஜூலை 10ம் தேதிக்குள் அசல் கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை, சாதிச்சான்றிதழ், மாவட்ட வேலைவாய்ப்பு இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களுடன் நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT